பீகாரை ஊடுருவல்காரர் இல்லாத மாநிலம் ஆக்குவோம்: அமித்ஷா


பீகாரை ஊடுருவல்காரர் இல்லாத மாநிலம் ஆக்குவோம்: அமித்ஷா
x

பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.

பாட்னா,

பீகார் சட்டசபை 2-ம் கட்ட தேர்தலையொட்டி, மேற்கு சாம்பரன் மாவட்டம் பேட்டியாவில் நடந்த பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

பீகாரில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்காளதேசத்தினர், வேலைவாய்ப்புகளை பறித்துக்கொண்டனர். நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளனர். பீகாரை ஊடுருவல்காரர் இல்லாத மாநிலம் ஆக்கவே இந்த தேர்தல் நடக்கிறது.

லாலு குடும்பத்தினர் ஆட்சிக்கு வந்தால், ஊடுருவல்காரர்கள் சேர்ப்பு வாரியம்தான் அமைப்பார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் கொலை, கற்பழிப்புகள் சர்வசாதாரணமாக நடந்தன. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அத்தகைய நபர்களுக்கு இடமில்லை. சாம்பரனில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். மூடப்பட்ட அனைத்து சர்க்கரை ஆலைகளும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் மீண்டும் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story