‘மந்திரம் சொல்லி சாம்பலாக்கி விடுவோம்..’ - வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த போலி சாதுக்கள் கைது

கேட்பதை தரவில்லை என்றால், உங்களை மந்திரம் சொல்லி எரித்து சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
‘மந்திரம் சொல்லி சாம்பலாக்கி விடுவோம்..’ - வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த போலி சாதுக்கள் கைது
Published on

லக்னோ,

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு தம்பதியினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் காரை சில நபர்கள் வழிமறித்தனர். அவர்கள் தங்கள் உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொண்டு, மந்திரம் சொல்வது போல் சில வார்த்தைகளை உச்சரித்தனர்.

பின்னர் அவர்கள் தாங்கள் கேட்பதை தரவில்லை என்றால், உங்களை மந்திரம் சொல்லி எரித்து சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் முழுவதையும் அந்த தம்பதியினர் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் ஒருவழியாக அங்கிருந்த தப்பிவந்து, இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்பையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட 7 போலி சாதுக்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வேலைவாய்ப்பு இல்லாததால் இவ்வாறு வழிப்பறி செய்ய முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com