2025-26 2-ம் காலாண்டில் வங்கிகள் சந்தித்த லாப-நஷ்டம் எவ்வளவு...?

2025-26 2-ம் காலாண்டில் வங்கிகள் சந்தித்த லாப-நஷ்டம் வெளியிடப்பட்டுள்ளன.
2025-26 2-ம் காலாண்டில் வங்கிகள் சந்தித்த லாப-நஷ்டம் எவ்வளவு...?
Published on

புதுடெல்லி,

இந்திய வங்கிகள் தங்களுடைய லாப-நஷ்ட கணக்குகளை நேற்று வெளியிட்டன. அதன்படி இந்த நிதியாண்டின் (2025-26) 2-ம் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிகர லாபம் ரூ.13 ஆயிரத்து 357 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் பதிவானதைவிட 3.2 சதவீதம் அதிகம்.

எச்.டி.எப்.சி. வங்கியின் நிகர லாபம் ரூ.19 ஆயிரத்து 610 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிகளிலேயே அதிக லாபம் சம்பாதித்த வங்கியாக உள்ள இது கடந்த காலத்தில் பதிவானதை காட்டிலும் 10 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெடரல் வங்கியின் வருமான கணக்கு ரூ.955 கோடி அளவில் லாபமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் காலாண்டை காட்டிலும் 9.6 சதவீதம் அதிகமாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com