பீகாரில் வன்முறையாளர்களின் ஆட்சி மீண்டும் வர மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி


பீகாரில் வன்முறையாளர்களின் ஆட்சி மீண்டும் வர மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்:  பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 Oct 2025 10:23 PM IST (Updated: 23 Oct 2025 10:30 PM IST)
t-max-icont-min-icon

போதிய மின்சாரம் இருக்கும்போது, தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகம் வளர்ச்சியடையும் என பிரதமர் மோடி கூறினார்.

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பீகாரில் பா.ஜ.க. இளம் தொண்டர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர், இந்த தேர்தல் பீகாரின் வளத்திற்கான புதிய அத்தியாயம் ஒன்றை எழுதும் தேர்தலாக இருக்கும். இதில் இளைஞர்களின் பெரும் பங்கு இருக்கும் என்றார்.

வாக்குகளின் சக்தியால், ராமர் கோவில் கட்டியெழுப்பப்பட்டு உள்ளது. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாடு நக்சலைட்டுகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகிறது என்றும் பேசினார். பீகாரில் மீண்டும் வன்முறையாளர்களின் ஆட்சி வர மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.

பீகாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, வளர்ச்சி பணிகளில் ஒரு புதிய உத்வேகம் பிறந்தது. மின் விநியோகம் மேம்பட்டது. போதிய மின்சாரம் இருக்கும்போது, தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகம் வளர்ச்சியடையும் என்பது நமக்கு தெரியும். இதனால், உங்களுக்கு வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என கூறினார்.

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். பீகாரில் அடுத்து ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கான புதிய சகாப்தம் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுபற்றி தொண்டர்கள் முன் பேசிய அவர், நீங்கள் அனைவரும் முதல்-மந்திரியின் ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் பலன்களை பெறாத பெண்களின் பட்டியல் ஒன்றை தயாரியுங்கள்.

இதன்பின்னர் அவர்களுடன் ஒன்றாக அமருங்கள். அவர்களிடம், நம்முடைய ஆட்சி மீண்டும் வந்ததும், நிதியுதவி உங்களுக்கு வழங்கப்படும் என்ற உறுதியை அளியுங்கள் என பேசினார்.

1 More update

Next Story