பாக். விமானங்களை வீழ்த்திய நிலையில் ஆபரேஷன் சிந்தூரை ஏன் நிறுத்தினீர்கள்? காங்கிரஸ் கேள்வி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானுக்கு சொந்தமான 6 விமானங்களை வீழ்த்தினோம் என்று விமானப்படை தளபதி கூறினார்.
புதுடெல்லி,
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தளபதி ஏ.பி.சிங் நேற்று கூறியிருந்தார்.இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், ‘விமானப்படை தளபதி ஏ.பி.சிங்கின் புதிய தகவல்கள் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது பிரதமர் மோடி ஏன் மே 10-ந்தேதி மாலையில் திடீரென ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தினார்? எங்கிருந்து அவருக்கு அழுத்தம் வந்தது? அவர் மிக விரைவாக அடிபணிந்தது ஏன்?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
Related Tags :
Next Story






