கேரள சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ், பாஜக ஆர்ப்பாட்டம்


கேரள சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ், பாஜக ஆர்ப்பாட்டம்
x

மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை கட்டிட விபத்து ஏற்பட்டது

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை கட்டிட விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் 10ம் வார்டில் உள்ள கழிவறைப்பகுதியின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிந்து என்ற பெண் உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மாநில சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் பதவி விலக வலியுறுத்தி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ், பாஜக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. கேரள அரசுக்கு எதிராகவும், சுகாதாரத்துறை மந்திரிக்கு எதிராகவும் கோஷக்களை எழுப்பி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story