உடல் ஆரோக்கியத்திற்காகவும், வெற்றிக்காகவும் வாழ்த்துகிறேன்: நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

உடல் ஆரோக்கியத்திற்காகவும், வெற்றிக்காகவும் வாழ்த்துகிறேன்: நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x

வருகிற ஆண்டுகளில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான தூதரக அளவிலான நட்புறவு தொடர்ந்து வளம் பெறும் என்றும் அவர் அதில் தெரிவித்து இருக்கிறார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு இன்று தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, இந்திய மக்களுக்கு நெதன்யாகு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

அவர் வாழ்த்து கூறியதற்காக நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்து கொண்ட பிரதமர் மோடி, உங்களுடைய பிறந்த நாளுக்கு என்னுடைய மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார். உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்காகவும், வெற்றிக்காகவும் வாழ்த்து கூறுகிறேன் என்றும் தெரிவித்து உள்ளார்.

வருகிற ஆண்டுகளில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான தூதரக அளவிலான நட்புறவு தொடர்ந்து வளம் பெறும் என்றும் அவர் அதில் தெரிவித்து இருக்கிறார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும். புதிய கண்டுபிடிப்பு, நட்புறவு, பாதுகாப்பு மற்றும் ஒரு சிறப்பான வருங்காலம் ஆகியவற்றிற்கான நட்பு நாடுகளாக இந்தியாவும், இஸ்ரேலும் உள்ளன என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story