காதலியை சுட்டுக்கொன்று இளைஞர் தற்கொலை முயற்சி - அதிர்ச்சி சம்பவம்


காதலியை சுட்டுக்கொன்று இளைஞர் தற்கொலை முயற்சி - அதிர்ச்சி சம்பவம்
x

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி,

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பஹ் பகுதியை சேர்ந்த இளைஞர் நீரஜ் (வயது 25). இவரும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி பின்னர் விவாகரத்து பெற்றவர் ஆவார்.

இந்நிலையில், நீரஜிற்கும் அவரது காதலிக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை நிலவி வந்துள்ளது. அந்த வகையில் நேற்று இளம்பெண்ணின் வீட்டில் வைத்து காதலர்கள் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் நீரஜ் தான் மறைத்து கொண்டு வந்த துப்பாக்கியால் காதலியை சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இளம்பெண் உயிரிழந்தார். பின்னர், நீரஜ் தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவர் படுகாயமடைந்தார்.

இந்த துப்பாக்கி சூடு குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று நீரஜை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தித்தனர். மேலும் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நீரஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story