திடீரென முடங்கிய எக்ஸ் வலைதளம்; பயனாளர்கள் அவதி


திடீரென முடங்கிய எக்ஸ் வலைதளம்; பயனாளர்கள் அவதி
x

உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமாக எக்ஸ் வலைதளம் (டுவிட்டர்) திகழ்கிறது.

டெல்லி,

உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமாக எக்ஸ் வலைதளம் (டுவிட்டர்) திகழ்கிறது. இந்த வலைதளத்தை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியுள்ளது. மாலை 5.15 மணி முதல் வலைதளம் முடங்கியுள்ளது.

இதனால் எக்ஸ் பயனாளர்கள் தங்கள் கணக்கை லாக் இன், லாக் அவுட் செய்ய முடியாமலும், டுவிட் செய்ய முடியாமலும், டுவிட் செய்யப்பட்ட பதிவுகளை பார்க்க முடியாமலும் அவதியடைந்து வருகிண்றனர்.

1 More update

Next Story