இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி கோகுல்ரோடு பகுதியை சேர்ந்தவர் சையது ருகான். இவருக்கு அந்தப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. அந்த பெண்ணிடம் தனது பெயர் ரமேஷ் என்றும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசைவார்த்தைகள் கூறி உள்ளார். இதனை நம்பிய இளம்பெண்ணும் அவருடன் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளார்.

மேலும், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணுடன் சையது ருகான் உல்லாசம் அனுபவித்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண் கர்ப்பமாகி உள்ளார். இதனை அறிந்த சையது ருகான், இளம்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதுகுறித்து கோகுல்ரோடு போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது ருகானை கைது செய்தனர். விசாரணையில், அவர் இந்து பெயரை கூறி இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதேபோல் அவர் பல பெண்களிடம் பழகி ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து கோகுல் ரோடு போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

X

Daily Thanthi
www.dailythanthi.com