காதலனை நம்பி சென்ற இளம்பெண்... நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பலாத்காரம் - 3 பேர் கைது

தாங்கள் அழைக்கும்போதெல்லாம் வர வேண்டும் என்று கூறி, பலமுறை அந்த பெண்ணை 3 பேரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் உள்ள மகதி நகர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கும், அவர் படிக்கும் அதே கல்லூரியைச் சேர்ந்த மற்றொரு மாணவரான விகாஸ் என்பவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதற்கிடையில் விகாஸ் அந்த பெண்ணை தனது நண்பரான பிரசாந்த் என்பவரின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். காதலனை நம்பி அந்த பெண் அங்கு சென்ற நிலையில், அந்த வீட்டில் வைத்து இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அவர்கள் நெருகமாக இருந்ததை விகாஸின் மற்றொரு நண்பரான சேத்தன் என்பவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்து இளம்பெண்ணை விகாஸ், பிரசாந்த் மற்றும் சேத்தன் ஆகிய 3 பேரும் மிரட்டியுள்ளனர்.
தாங்கள் அழைக்கும்போதெல்லாம் வர வேண்டும் என்று கூறி, பலமுறை அந்த பெண்ணை அவர்கள் 3 பேரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். சுமார் 2 மாதங்களாக நீடித்த இந்த துன்புறுத்தலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், இது குறித்து மகதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.






