ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி - புதிய கட்சி தொடங்கிய காடுவெட்டி குரு மகள்


ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி - புதிய கட்சி தொடங்கிய காடுவெட்டி குரு மகள்
x

ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தொடங்கியுள்ளார்.

சேலம்

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன். காடுவெட்டி குரு என அழைக்கப்படும் இவர் வன்னியர் சங்க தலைவராகவும், பாமக மூத்த தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இருமுறை எம்.எல்.ஏ. ஆன இவர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு மரணமடைந்தார். இவருக்கு கனல் அரசு என்ற மகனும், விருதாம்பிகை என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தொடங்கியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை விருதாம்பிகை அறிமுகப்படுத்தினார்.

பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே ராமதாஸ், அன்புமணி தரப்பு என இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் 3வதாக ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி துவங்கப்பட்டுள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story