விஜய் எந்த மிரட்டலுக்கும் அசைந்து கொடுக்க மாட்டார்-புகழேந்தி

வருகிற சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.விற்கு எல்லா இடத்திலும் டெபாசிட் பறிபோகும் என்று புகழேந்தி கூறினார்.
ஓசூர்,
எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி வா.புகழேந்தி, ஓசூரில் உள்ள அவரது அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “வருகிற சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.விற்கு எல்லா இடத்திலும் டெபாசிட் பறிபோகும்.
அ.தி.மு.க.வின் முழு அழிவுக்கு காரணம் அவர் பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து செல்வதுதான். தி.மு.க.வும், த.வெ.க.வும் தான் களத்தில் உள்ளது. அ.தி.மு.க. இல்லவே இல்லை. ஜனநாயகன் படத்திற்காக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று நான் திட்டமிட்டுள்ளேன். விஜய், எந்த மிரட்டலுக்கும் அசைந்து கொடுக்க மாட்டார். அடி பணிந்தும் வரமாட்டார். எனது அரசியல் நிலைப்பாடு குறித்து இன்னும் 10 நாட்களில் தெரிவிக்கிறேன்” என்றார்.






