கல்வி உதவித்தொகை பெற 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு


கல்வி உதவித்தொகை பெற 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு
x

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று நடந்தது.

புதுச்சேரி

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று நடந்தது.

படிப்பு உதவித்தொகை

மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி 2022-23-ம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெறுவதற்காக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு புதுவையின் 4 பிராந்தியங்களிலும் 14 மையங்களில் இன்று நடந்தது.

4 பிராந்தியங்களில் இருந்தும் இந்த தேர்வை எழுத 3 ஆயிரத்து 764 பேர் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 3 ஆயிரத்து 610 பேர் (95.91 சதவீதம்) தேர்வில் கலந்துகொண்டனர். அதாவது புதுச்சேரியில் 2 ஆயிரத்து 628 பேர், காரைக்காலில் 815 பேர், மாகியில் 50 பேர், ஏனாமில் 117 பேர் கலந்துகொண்டனர்.

விடைக்குறிப்புகள்

இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் மற்றும் விடைக்குறிப்புகள் https://www.nmmsntspdy.com என்ற இணையதள முகவரியில்21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும். விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வருகிற 23-ந்தேதிக்குள் nmmsnts@dsepdy.edu.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யலாம்.

தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி நிதியுதவியாக 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.


Next Story