1,086 மீனவ முதியோருக்கு ஓய்வூதியத்தொகை


1,086 மீனவ முதியோருக்கு ஓய்வூதியத்தொகை
x

புதுவையில் 1,086 மீனவ முதியோருக்கு ஓய்வூதியத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி

1,086 மீனவ முதியோருக்கு ஓய்வூதியத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

மீனவ முதியோர்

புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஓய்வூதியம் வேண்டி புதிதாக விண்ணப்பித்த சுமார் 1,086 முதியோர்களுக்கு 12 மாதங்கள் ஓய்வூதியம் வழங்க ரூ.3.30 கோடிக்கு அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு ஓய்வூதியம் வழங்குவதை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், செந்தில்குமார், பிரகாஷ்குமார், கல்யாணசுந்தரம், சிவசங்கர் மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வ சிகாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ரூ.30 கோடி ஒதுக்கீடு

புதிய ஓய்வூதிய தொகையானது கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது. புதுவை மாநிலத்தில் மொத்தமுள்ள 9 ஆயிரத்து 202 மீனவ முதியோர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 12 மாதங்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.30 கோடியே 95 லட்சத்து 58 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story