சிவில் சர்வீசஸ் தேர்வை 1,500 பேர் எழுதினர்


சிவில் சர்வீசஸ் தேர்வை 1,500 பேர் எழுதினர்
x

புதுவையில் 8 மையங்களில் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வை 1,500 பேர் எழுதினா்.

புதுச்சேரி

புதுவையில் 8 மையங்களில் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வை 1,500 பேர் எழுதினா்.

8 மையங்கள்

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் (முதல்நிலை) இன்று நடந்தது. புதுவையில் தேர்வு எழுத 2 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதற்காக புதுவையில் வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி உள்பட 8 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. புதுவையில் தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழக பகுதிகளை சேர்ந்தவர்கள் காலையிலேயே தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர்.

1,500 பேர் எழுதினார்கள்

பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை தவிர தேர்வு மையத்துக்குள் வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் போலீஸ் சூப்பிரண்டு சுவாதிசிங், தேர்வர்களின் ஹால்டிக்கெட்டை சரிபார்த்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தேர்வு மையங்களுக்கு வந்து செல்ல வசதியாக புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்திலும் தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுத வந்தவர்களின் கார், இருசக்கர வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேர்வுகள் காலை 9.30 மணிமுதல் 11.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணிமுதல் 4.30 மணிவரையிலும் என இருவேளைகளாக நடந்தது. காலையில் நடந்த தேர்வை 1,537 பேரும், பிற்பகலில் நடந்த தேர்வை 1,520 பேரும் எழுதினார்கள். சுமார் 60 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.

60 சதவீதம்

வழக்கமாக கடந்த காலங்களில் அதிகபட்சமாக விண்ணப்பித்தவர்களில் 48 சதவீதம் பேர்தான் இந்த தேர்வுகளை எழுதினார்கள். ஆனால் இந்த ஆண்டு 60 சதவீதம் அளவுக்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story