மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது


மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

மூலக்குளம் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூலக்குளம்

ரெட்டியார்பாளையம் போலீசார் கம்பன்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் உழவர்கரை வயல்வெளி தெருவை சேர்ந்த லெனின் பிஷப் (வயது 21), ரெட்டியார்பாளையம் கம்பன் நகரை சேர்ந்த ஹரிஷ் (22) என்பதும், மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story