கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் பட்டினச்சேரி ரெயில் தண்டவாளம் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் பட்டினச்சேரி ரெயில் தண்டவாளம் அருகே சிலர் கஞ்சா விற்பதாக திரு-பட்டினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் திரு-பட்டினம் பகுதியை சேர்ந்த மீரான் சாகிப் (வயது40), காரைக்கால் டி.கே.நகரை சேர்ந்த அப்துல் ரஹ்மான் (24), வி.எஸ். நகரை சேர்ந்த விக்னேஷ் (22) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story