மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 பேர் கைது


மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 பேர் கைது
x

புதுவையில் முன்விரோதத்தில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி

புதுவை சாரம் சக்தி நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது35). மாற்றுத்திறனாளி. இவர் சாரம் பகுதியில் உள்ள நகராட்சி கழிப்பிடத்தை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஜய், சூர்யா, கணேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சேர்ந்து ஜார்ஜை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story