ரவுடியை பழித்தீர்க்க கத்திகளுடன் சென்ற 3 பேர் கைது


ரவுடியை பழித்தீர்க்க கத்திகளுடன் சென்ற 3 பேர் கைது
x

புதுவையில் போலீசார் வாகன சோதனையின்போது, ரவுடியை பழித்தீர்க்க கத்திகளுடன் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

போலீசார் வாகன சோதனையின்போது, ரவுடியை பழித்தீர்க்க கத்திகளுடன் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கத்திகளுடன் சிக்கினர்

புதுவை முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில் போலீசார் முருங்கப்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் நேற்று இரவு ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றனர்.

உடனே அவர்களை போலீசார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம் 2 கத்தி இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

கைது

விசாரணையில் அவர்கள், முதலியார்பேட்டை ஆகாஷ் (வயது21), நெல்லித்தோப்பு கார்த்திவேல் (21), உருளையன்பேட்டை பிரசன்னா (23) என்பது தெரியவந்தது. மேலும் கடந்த மாதம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவர் ஆகாஷை தாக்கியதாக தெரிகிறது. எனவே அதற்கு பழித்தீர்க்கும் விதமாக கத்திகளுடன் சென்றது தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து கத்திகளையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


Next Story