கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
x

குயவர்பாளையம் சமுதாயக்கூடம் அருகே கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் குயவர்பாளையம் சமுதாயக்கூடம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் வந்தது. உடனே இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்த 3 பேரை அதிரடியாக சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்த சரத் (வயது 19), கொசப்பாளையம் மணிமாறன் (18), நெல்லித்தோப்பு அண்ணா நகர் டேனியல் (18) என்பதும், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த 144 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story