பாப்ஸ்கோ குடோனில் கெட்டுப் போன 30 டன் அரிசி


பாப்ஸ்கோ குடோனில் கெட்டுப் போன 30 டன் அரிசி
x

பாப்ஸ்கோ குடோனில் 2 ஆண்டுகளாக எடுக்காமல் விட்டதால் 30 டன் ரேஷன் அரிசி கெட்டுப்போனது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க தி.மு.க. வலியுறுத்தியது.

புதுச்சேரி

பாப்ஸ்கோ குடோனில் 2 ஆண்டுகளாக எடுக்காமல் விட்டதால் 30 டன் ரேஷன் அரிசி கெட்டுப்போனது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க தி.மு.க. வலியுறுத்தியது.

பாப்ஸ்கோ குடோன்

புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான அங்காடி வளாகம் உள்ளது. இங்குள்ள 2 கடைகளை பாப்ஸ்கோ நிறுவனம் வாடகைக்கு எடுத்து குடோனாக பயன்படுத்தி வருகிறது. இந்த கட்டிடத்தில் இருந்து கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசியது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் தெரிவித்ததன் பேரில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, தொகுதி எம்.எல்.ஏ. சம்பத் ஆகியோர் இன்று காலை அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு மூடப்பட்டிருந்த 2 கடைகளில் இருந்து தூர்நாற்றம் வீசியது. உடனே நகராட்சி அதிகாரிகளை வரவழைத்து அந்த 2 கடைகளையும் திறக்கும்படி கூறினர். அதன்படி கடைகளை திறந்து பார்த்த போது, அதில் சாக்கு மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 டன் ரேஷன் அரிசி கெட்டுப் போய் துர்நாற்றம் வீசியது தெரியவந்தது. அதில் கரப்பான்பூச்சி, வண்டுகள் மொய்த்துக்கொண்டு இருந்தன.

அதிகாரிகள் அலட்சியம்

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாப்ஸ்கோ ஊழியர்கள் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வாங்காமல் மீதி இருந்த சுமார் 30 டன் அரிசியை இங்கு கொண்டு வந்து வைத்துள்ளனர். அப்போது கொரோனா காலம் என்பதாலும், அதனை அவர்கள் திருப்பி எடுக்காமல் அலட்சியமாக விட்டதாலும் மூடைகளில் இருந்த அரிசி கெட்டுப் போனது தெரியவந்தது.

இது குறித்து தி.மு.க. மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான சிவா கூறுகையில், இங்கு சுமார் 30 டன் ரேஷன் அரிசி மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு கரப்பான்பூச்சி, வண்டுகள் மொய்த்து தூர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு பயன்படாத வகையில் மக்கும் அளவுக்கு மெத்தனப் போக்குடன் செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரிசி பாப்ஸ்கோ அல்லது குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு சொந்தமானதா? பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. எனவே அரசு இந்த அரிசி எந்த துறைக்கு சொந்தமானது என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story