306 பேருக்கு தொடர் சிகிச்சை


306 பேருக்கு தொடர் சிகிச்சை
x

புதுவையில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 254 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 12 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. அதில் 11 பேர் புதுச்சேரியையும், ஒருவர் காரைக்காலையும் சேர்ந்தவர் ஆவர். நேற்று 72 பேர் குணமடைந்தனர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 19 பேர், வீடுகளில் 287 பேர் என 306 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். புதுவையில் தொற்று பரவல் 4.72 சதவீதமாகவும், குணமடைவது 98.71 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story