புதுச்சேரியில் புதிதாக 39 பேருக்கு கொரோனா


புதுச்சேரியில் புதிதாக 39 பேருக்கு கொரோனா
x

புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

புதுச்சேரி,

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியிலும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 36 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 390 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அவர்களில் 13 பேர் புதுச்சேரியையும், 19 பேர் காரைக்காலையும், 5 பேர் ஏனாமையும், 2 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.நேற்று 32 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 6 பேர், வீடுகளில் 139 பேர் என 145 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.


Next Story