வாலிபர்களை வழிமறித்து தாக்கிய 4 பேர் கைது

திருவேட்டக்குடி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர்களை வழிமறித்து தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோட்டுச்சேரி
கோட்டுச்சேரியை அடுத்த திருவேட்டக்குடி கோவில்மேடு வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரதீப் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் சஞ்சய் (21) என்பவருடன் கோட்டுச்சேரியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார்.
திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, முன்விரோதம் காரணமாக திருவேட்டக்குடி காலனியை சேர்ந்த கவுதம், மதிவாணன். பூபதி, மற்றொரு கவுதம் ஆகியோர் பிரதீப், சஞ்சய் ஆகியோரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த கவுதம் தரப்பினர், பிரதீப்பையும், அவரது நண்பரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த 2 பேரும் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக கோட்டுச்சேரி போலீசில் பிரதீப் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதம், மதிவாணன், பூபதி உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.