4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்


4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்
x

புதுச்சேரியில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எஸ். அதிகாரிகள்

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவின்பேரில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி ஸ்ரீபிரிஜேந்திர குமார் யாதவ் புதுச்சேரி குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவு சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு போக்குவரத்து, சைபர் கிரைம், சி.சி.டி.என்.எஸ். ஆகிய பிரிவுகளையும் அவர் கவனிப்பார்.

குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நார சைதன்யா புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு

சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார், காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டாகவும், போக்குவரத்து- என்ஜீனியரிங்- சாலை பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீமணிஷ், ஐ.ஆர்.பி.என். கமாண்டன்டாகவும், கூடுதலாக சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பும் வழங்கப்பட் டுள்ளது.

இதற்கான ஆணையை புதுச்சேரி தலைமை செயலர் ராஜீவ் வர்மா பிறப்பித்துள்ளார்.


Next Story