லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
x

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், லேப்டாப் மற்றும் செல்போன்களை படத்தில் காணலாம்

அரியாங்குப்பம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 செல்போன் மற்றும் ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 செல்போன் மற்றும் ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

லாட்டரி விற்பனை

அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்பனை நடப்பதாக புகார்கள் வந்தது. குறிப்பாக மார்க்கெட் மற்றும் முக்கிய சந்திப்புகளில் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, அரியாங்குப்பம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் தீவிர ரோந்து நடைபெற்றது. அப்போது அங்குள்ள தனியார் திருமண மண்டபம் அருகே லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

4 பேர் கைது

விசாரணையில், அவர்கள் அரியாங்குப்பம் அருகே காக்காயந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மொய்தீன் (வயது 50) அவரது சகோதரர் காஜா மொய்தீன் (48) என தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரி திலாஸ்பேட்டை அருகே காந்திதிருநல்லூரை சேர்ந்த லிங்கேஷ் என்ற லிங்கேஸ்வரன் (46) மற்றும் சாரம் பாலாஜி நகரை சேர்ந்த ராமராஜன் (38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 10 செல்போன்கள், 1 லேப்டாப், பில் புத்தகங்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்து 271 ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 4 பேரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story