லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது

புதுவை திருக்கனூர் மெயின்ரோட்டில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனூர்
திருக்கனூர் மெயின்ரோட்டில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக திருக்கனூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் லாட்டரி சீட்டு விற்றதாக செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 39), சக்திவேல் (42), ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விற்பனை ஏஜெண்டாக செயல்பட்ட கூனிச்சம்பட்டை சேர்ந்த சக்திவேல் முருகன் (38), உருளையன்பேட்டை ஜே.வி.எஸ். நகரை சேர்ந்த மணிகண்டன் (33) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story






