லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது

திருபுவனை அடுத்த ஆண்டியார்பாளையத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4 பேர் கைது போலீசார் கைது செய்யப்பட்டனர்.
திருபுவனை
திருபுவனை அடுத்த ஆண்டியார்பாளையத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் ஆண்டியார்பாளையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு கேரள மாநிலத்தின் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த 4 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மகாவிஷ்ணு நகர் ஆனந்தன் (வயது 34), வளவனுார் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெரு பாஸ்கரன் (54), சிறுவந்தாடு மாரியம்மன் கோவில் தெரு ராஜி (58), கண்டமங்கலம் தாமோதரன் (50) என்பது தெரிய வந்தது. இந்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன், லாட்டரி சீட்டு மற்றும் ரூ.15,450 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story






