ஊருக்குள் நுழைய ரவுடிகள் 4 பேருக்கு தடை

புதுவையில் ஊரின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் 4 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
வில்லியனூர் கணுவாபேட்டை புதுநகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது24). கோபாலன் கடையை சேர்ந்தவர் அப்பு என்கிற சேவியர் (31). ரவுடிகளான இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்களால் ஊர் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் 2 பேரையும் 3 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதிக்கும்படி மாவட்ட கலெக்டருக்கு, வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு பரிந்துரை செய்துள்ளார்.
இதேபோல் சண்முகாபுரத்தை சேர்ந்த அருண் (20), லம்போர்ட் சரவணன் நகரை சேர்ந்த சூர்யா (26) ஆகியோரையும் ஊருக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






