தொழில்நுட்ப கல்லூரியில் தீ விபத்து- 40 கம்ப்யூட்டர் எரிந்து சேதம்


தொழில்நுட்ப கல்லூரியில் தீ விபத்து- 40 கம்ப்யூட்டர் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 26 Sep 2023 6:04 PM GMT (Updated: 27 Sep 2023 12:23 PM GMT)

புதுச்சேரி மாநிலம் மாகி பிராந்தியத்தில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் 40 கம்ப்யூட்டர்கள் எரிந்து சேதமாகின.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலம் மாகி பிராந்தியம் பள்ளூரில் கூட்டுறவு உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியின் கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளிகள் இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கிருந்த 40 கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து மாகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story