பனை மரத்தில் கார் மோதியதில் கர்ப்பிணி உள்பட 5 பேர் படுகாயம்


பனை மரத்தில் கார் மோதியதில் கர்ப்பிணி உள்பட 5 பேர் படுகாயம்
x

வில்லியனூர் அருகே பனை மரத்தில் கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே பனை மரத்தில் கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

7 மாத கர்ப்பிணி

வில்லியனூர் அருகே உள்ள கூனிமுடக்கு பகுதியை சேர்ந்தவர் விஜயேந்திரன். மளிகை கடைக்காரர். இவரது மனைவி ரேவதி (வயது 27). இவர்களுக்கு 3 வயதில் நிஷாந்த் என்ற மகன் உள்ளான். ரேவதி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் ரேவதி, வில்லியனூர் வசந்தம் நகரை சேர்ந்த தனது சகோதரர் திவாகர், அவரது மனைவி ஆனந்தி மற்றும் அவர்களது 1½ வயது குழந்தையுடன் புதுச்சேரிக்கு காரில் சென்றனர்.

பனை மரத்தில் மோதியது

பின்னர் அங்கிருந்து கூனிமுடக்குக்கு திரும்பினர். காரை திவாகர் ஓட்டினார். கூனிமுடக்கு பகுதியில் வந்தபோது, குறுக்கே மாடுகள் சென்றன. அதன் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பனை மரத்தில் கார் மோதியது. இந்த விபத்தில் கர்ப்பிணி ரேவதி உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ரேவதி தவிர மற்ற 4 பேரும் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்து குறித்து விஜயேந்திரன் அளித்த புகாரின்பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story