விவசாயிகளுக்கு ரூ.60 லட்சம் உற்பத்தி மானியம்


விவசாயிகளுக்கு ரூ.60 லட்சம் உற்பத்தி மானியம்
x

மணிலா, பயிறு வகைகள், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ரூ.60 லட்சம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்தார்.

புதுச்சேரி

மணிலா, பயிறு வகைகள், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ரூ.60 லட்சம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்தார்.

புதுவை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உற்பத்தி மானியம்

மணிலா, எள், சிறுதானியம், பயிறு வகைகள் மற்றும் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்கள் வழங்குவதற்கு பதிலாக உற்பத்தி மானியம் வழங்குகிறது. அதன்படி 2022-23-ம் ஆண்டு மணிலா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 514 விவசாயிகளுக்கு 590.22 ஏக்கருக்கு ரூ.29 லட்சத்து 51 ஆயிரத்து 100 வழங்கப்படுகிறது.

மேலும் சிறுதானியம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 27 விவசாயிகளுக்கு 42.45 ஏக்கருக்கு ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்து 250-ம், பயிறு வகைகள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 1,046 விவசாயிகளுக்கு 1244.25 ஏக்கருக்கு ரூ.24 லட்சத்து 88 ஆயிரத்து 100-ம் வழங்கப்படுகிறது.

வங்கிக்கணக்கில்...

பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 39 விவசாயிகளுக்கு 37.19 ஏக்கருக்கு ரூ.3 லட்சத்து 71 ஆயிரத்து 900-மும் ஆக ரூ.60 லட்சத்து 23 ஆயிரத்து 750 புதுவை பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story