சிக்னல் கம்பத்தோடு சாலையில் விழுந்த பேனர்


சிக்னல் கம்பத்தோடு சாலையில் விழுந்த பேனர்
x

புதுவையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சிக்னல் கம்பத்தோடு சாலையில் பேனர் விழுந்தது.

புதுச்சேரி

புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட் அவுட்டுகள் வைப்பது வழக்கமாகி விட்டது. மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய சாலைகள், சந்திப்புகளில் பல அடி உயரத்துக்கு இவை வைக்கப்படுகின்றன.இதற்கிடையே இன்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக நகரப்பகுதியில் பல இடங்களில் வைக்கப்பட்டிருநத பேனர், கட் அவுட்டுகள் சரிந்து விழுந்தன. கொக்கு பார்க் அருகில் சிக்னல் கம்பத்தில் கட்டியிருந்த பேனர் சிக்னல் கம்பத்தோடு சரிந்து விழுந்தது. அந்த சமயத்தில் யாரும் வராததால் அசம்பாவித சம்பவம் நடைபெறவில்லை.

இதேபோல் ஆங்காங்கே பேனர்கள் சரிந்து விழுந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் உள்ளாட்சித்துறையினர் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பேனர்களை அகற்றினா்.



Next Story