புதுவை சட்டசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்


புதுவை சட்டசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
x

புதுவை சட்டசபையில் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அ.தி.மு.க. கூட்டத்தில் வலியுறுத்தல்

புதுச்சேரி

புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் துணை தலைவர் ராஜாராமன், இணை செயலாளர் கணேசன், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழக உடையார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. போட்டியிட வாய்ப்பினை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்தி தர வலியுறுத்துவது, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடகா அரசின் செயலை புதுச்சேரி அரசு சிறப்பு சட்டமன்றம் கூட்டத்தை கூட்டி கண்டன தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும், அரசு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை, தினக்கூலி தொழிலாளர்களாக நியமனம் செய்வது, மாநில வளர்ச்சிக்கு தடையாக உள்ள அதிகாரிகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story