பனை மரம் சாய்ந்து விழுந்து வீடு, கடை சேதம்


பனை மரம் சாய்ந்து விழுந்து வீடு, கடை சேதம்
x

பாகூரில் பனைமரம் சாய்ந்து விழுந்து வீடு, கடை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக தாய், மகன் உயிர் தப்பினர்.

பாகூர்

பாகூரில் பனைமரம் சாய்ந்து விழுந்து வீடு, கடை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக தாய், மகன் உயிர் தப்பினர்.

பனைமரம் சாய்ந்து விழுந்தது

புதுச்சேரி மாநிலத்தில் 2-வது பெரிய ஏரியாக பாகூர் ஏரி திகழ்கிறது. இந்த ஏரியின் கரையோரத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கரையோரத்தில் இருந்த பனைமரம் ஒன்று திடீரென சாய்ந்து சாலையோரத்தில் இருந்து சுந்தரி என்பவரது வீடு மற்றும் ரவி என்பவரது திருமண பாத்திரங்கள் வாடகைக்கு விடும் கடையின் மீது விழுந்தன.

இதில் வீடு, கடையும் பலத்த சேதம் அடைந்தன. நல்ல வேளையாக வீட்டில் தூக்கி கொண்டிருந்த சுந்தரி, அவரது மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வாகன ஓட்டிகள் அச்சம்

விழுந்த இந்த பனை மரம் இன்று மாலை வரை அகற்றப்படாமல் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது. மேலும் காற்று வீசும்போது பனைமரம் அசைந்து அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் சாலையின் குறுக்காக பனைமரம் அந்தரத்தில் தொங்கியதால் வாகன ஓட்டிகளும் ஒரு வித அச்சத்துடனே சென்று வந்தனர்.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தும் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிடவில்லை. எனவே விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு அந்த பனைமரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story