கடலில் மூழ்கி வாலிபர் சாவு

கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பனித்திட்டு கிராமத்தில் கடலில் மூழ்கி வாலிபர் சாவு
பாகூர்
கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பனித்திட்டு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வல்லத்தான் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 23). புதுச்சேரியை சேர்ந்த செல்லதுரை, ரகுமான், விக்னேஷ் மற்றும் ஐயனாரப்பன் ஆகிய 6 பேர் விசைப் படகில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மீன்பிடிக்க சென்றனர்.
அங்குள்ள தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் தங்கி மீன்பிடித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று மீன் பிடித்து விட்டு 6 பேரும் மீன்பிடி படகுகளிலேயே தங்கி உள்ளனர். அப்போது படகில் தடுமாறி விழுந்ததில் முத்துகிருஷ்ணன் கடலில் மூழ்கினார். சக மீனவர்கள் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் முத்துகிருஷ்ணன் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அறிந்த அவரது பெற்றோர் அங்கு சென்று புதுச்சேரி அரசு உதவி யுடன் முத்துகிருஷ்ணன் உடலை மீட்டு வந்தனர். புதுச்சேரியில் மீன்பிடி தொழிலில் போதிய வருவாய் கிடைக்காத நிலையில் வெளியூருக்கு சென்ற நிலையில் வாலிபர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் பனித்திட்டு கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியது.






