டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை


டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
x

பருவ மழை தொடங்க இருப்பதால், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.

காரைக்கால்

பருவ மழை தொடங்க இருப்பதால், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் குலோத்துங்கன் பேசியதாவது:-

காரைக்காலில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு பணியை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர், மாவட்ட நல வழித்துறையுடன் இணைந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

ஆஸ்பத்திரி தயார் நிலை

வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதால் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். குறிப்பாக குப்பைகள் குவிந்து கிடக்காமலும் வீடு மற்றும் கட்டடிங்களின் திறந்த வெளிப்பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையிலான பொருட்கள் இல்லாமலும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் டெங்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி, நகராட்சி ஆணையர் சத்யா, மேல்நிலை கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, மீன் வளத்துறை துணை இயக்குனர் சவுந்தரபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story