80 அடி கிணற்றில் தவறி விழுந்த முதியவர்


80 அடி கிணற்றில் தவறி விழுந்த முதியவர்
x

நெட்டப்பாகம் அருகே 80 அடி கிணற்றில் தவறி விழுந்த முதியவரை 2 நாட்களுக்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர்.

நெட்டப்பாக்கம்

நெட்டப்பாகம் அருகே 80 அடி கிணற்றில் தவறி விழுந்த முதியவரை 2 நாட்களுக்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர்.

கிணற்றில் கதறல் சத்தம்

நெட்டப்பாக்கம் அருகே உள்ள மடுகரை தமிழக எல்லைப்பகுதியில் உள்ளது. இங்குள்ள ஒரு கிணற்றுக்குள் இருந்து கதறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் முதியவர் ஒருவர் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மடுகரை தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ஏணி, கயிறு மூலமாக முதியவரை பத்திரமாக மீட்டனர்.

முதியவர் மீட்பு

விசாரணையில் அவர், தமிழக பகுதியான பட்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாவாடை (வயது 65) என்பதும், 2 நாட்களுக்கு முன்பு அந்த வழியாக நடந்து சென்றபோது கிணற்றில் தவறி விழுந்ததும் தெரியவந்தது. 80 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 2 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது.

இதனால் அவர் தண்ணீரில் இருந்தபடியே கடந்த 2 நாட்களாக கூச்சல் போட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை மடுகரையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.

கிணற்றில் விழுந்த முதியவர் 2 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story