சாலையோரத்தில் உணவின்றி தவித்த முதியவர்


சாலையோரத்தில் உணவின்றி தவித்த முதியவர்
x

கிருமாம்பாக்கம் அருகே சாலையோரத்தில் உணவின்றி தவித்த முதியவரை போலீசார் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பினர்,

பாகூர்

கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவில் அருகில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் 3 நாட்களாக உணவின்றி தவித்தார். இதைப்பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விசாரித்த போது தன்னைப் பற்றி தகவல் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். இதனால் அவரை படம் பிடித்து வெயிலின் தாக்கத்தால் நாளுக்கு நாள் உடல்நலம் குன்றி வருவதாக சமூக வலைதளத்தில் பொதுமக்கள் பதிவிட்டனர்.

இதைக்கண்ட கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 65) என்பதும், தனது மகனுடன் கோபித்துக் கொண்டு கன்னியக்கோவிலுக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவருக்கு தேவையான உணவு மற்றும் முதலுதவி செய்து ஆட்டோவில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Next Story