பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்


பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
x

இந்திய நாட்டின் உயரிய விருதினை பெற விண்ணப்பிக்கலாம் என்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவ துறை, சமூக பணி, அறிவியல் மற்றும் பொறியியல் துறை, வர்த்தகம் மற்றும் தொழில் துறை என்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதற்காக அவர்களை கவுரப்படுத்தும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெற விரும்புவர்கள் https://awards.gov.in என்ற சமூக வலைதளத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story