ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

காரைக்கால் மாவட்ட ஆஷா பணியாளர்கள் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடடனர்.

காரைக்கால்

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஆஷா பணியாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம்ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் இன்னும் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை.

இதை கண்டித்து காரைக்கால் மாவட்ட ஆஷா பணியாளர்கள் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடடனர். ஆர்ப்பாட்டத்துக்கு காரை பிரதேச ஆஷா ஊழியர் சங்க தலைவர் விஜயா தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், முதல்-அமைச்சர் ரங்கசாமி வாக்குறுதிப்படி உயர்த்தப்பட்ட ரூ.10,000 ஊதியத்தை உடனே வழங்கவேண்டும், ஆஷா ஊழியர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும், ஊக்கத் தொகையினை மாத மாதம் 5-ந் தேதிக்குள் வழங்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் சங்க அமைப்பு செயலாளர் ரோஸி நன்றி கூறினார்.


Next Story