பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் மீது தாக்குதல்


பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் மீது தாக்குதல்
x

வில்லியனூர் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்..

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உள்ள செம்பியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 38). இவர் ஏம்பலம் பகுதியில் தவளக்குப்பம்-மடுகரை சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஏம்பலம் பகுதியை சேர்ந்த ரவுடிகள் யுவராஜ், அய்யனார் ஆகியோர் அங்கு வந்து பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிகளிடம் ரூ.10 ஆயிரம் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த சண்முகராஜா மாமூல் தர முடியாது என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து சண்முகராஜா மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் பெட்ரோல் விற்பனை நிலையம் மீது நாட்டு வெடிகுண்டு வீசுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story