காதல் மனைவியை தாக்கி கொலை மிரட்டல்


காதல் மனைவியை தாக்கி கொலை மிரட்டல்
x

கூடுதல் வரதட்சணை கேட்டு காதல்மனைவியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த விமான நிலைய ஊழியர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி

கூடுதல் வரதட்சணை கேட்டு காதல்மனைவியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த விமான நிலைய ஊழியர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காதல் திருமணம்

புதுச்சேரி தன்வந்திரி நகர் புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 30). லாஸ்பேட்டை விமானநிலையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரும், லாஸ்பேட்டையை சேர்ந்த தனலட்சுமி (28) என்பவரும் கடந்த 2018-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர்.

அதன்பிறகு தனது கணவருடன் அவரது வீட்டில் தனலட்சுமி வசித்து வந்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தனலட்சுமி வீட்டார் சீர்செய்தது தொடர்பாக லோகேஸ்வரன் குறைகூறி, கூடுதலாக வரதட்சணை கேட்டு, தனலட்சுமியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

வீட்டை விட்டு விரட்டினர்

மேலும் குழந்தையை தன்னிடம் வைத்துக்கொண்டு தனலட்சுமியை வீட்டைவிட்டு விரட்டிவிட்டாராம். பின்னர் தனது குழந்தையை கேட்க சென்ற தனலட்சுமியை தரக்குறைவாக திட்டி, தாக்கி, லோகேஸ்வரன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு லோகேஸ்வரனின் தந்தை, அவரது அண்ணன், அக்கா மற்றும் மாமா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இது தொடர்பாக வில்லியனூர் அனைத்து மகளிர் போலீசில் தனலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் லோகேஸ்வரன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story