விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி


விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
x

புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன் எண்-1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடற்கரையில் மினி மாரத்தான் போட்டி இன்று நடந்தது

புதுச்சேரி

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் குழந்தைகளுக்கான ஹெல்லைன் எண்-1098 சேவை செயல்பட்டு வருகிறது. இந்த சேவை எண் மூலம் குழந்தைகளுக்கான மருத்துவ உதவி, குழந்தை கடத்தல், குழந்தை திருமணம், வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள், குழந்தைகள் படிப்பு, பாலியல் வன்முறை, குழந்தை தொழிலாளர்கள் என குழந்தைகளுக்கு எதிரான அனைத்து பிரச்சினைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம்.

இந்தநிலையில் புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன் எண்-1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடற்கரையில் மினி மாரத்தான் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. மினி மாரத்தான் போட்டியை ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் வல்லவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.


Next Story