பெண் தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


பெண் தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பெண் தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டு திட்டம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி

முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பொருளாதார துறை சார்பில் பெண் தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டு திட்டம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் முதல்வர் ராஜீசுகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பொருளாதார துறை தலைவி மர்சலின் மரி கிறிஸ்டின் முன்னிலை வகித்தார். தொழில் முனைவு மற்றும் வணிக பயிற்சியாளர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு தொழில் முனைவோர் திறன்கள் பற்றி விளக்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story