பாகூர் மூலநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா


பாகூர் மூலநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா
x

பாகூர் மூலநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாகூர்

பாகூரில் சுமார் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதற்கான கொடியேற்ற நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிடாரி அம்மன் குதிரை வாகன வீதியுலா நடைபெற்றது.

பின்னர் இன்று காலை பால விநாயகர், மூலநாதர், வேதாம்பிகை அம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பாகூர் தாசில்தார் பிரித்விராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவில் தினமும் இரவு சாமி வீதியுலா நடக்கிறது. வருகிற 29-ந் தேதி திருக்கல்யாண உற்சவம், ஜூலை 1-ந் தேதி தேரோட்டம், 2-ந் தேதி தெப்ப உற்சவம், 3-ந் தேதி 63 நாயன்மார்கள் உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், அர்ச்சகர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story