புதுச்சேரியில் மதுபான விற்பனை சலுகைகள் குறித்து விளம்பரம் செய்யத் தடை - கலால்துறை உத்தரவு


புதுச்சேரியில் மதுபான விற்பனை சலுகைகள் குறித்து விளம்பரம் செய்யத் தடை - கலால்துறை உத்தரவு
x

மதுபான விளம்பர பதாகைகளையும், சமூக வலைதள விளம்பரங்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி கலால்துறை தாசில்தார் சிலம்பரசன், மதுபானங்கள் விற்பனை விளம்பரங்கள் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதுக்கடை உரிமையாளர்கள் பல்வேறு பகுதிகளில் மதுபான விற்பனை சலுகைகள் குறித்து விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மதுபான விற்பனையாளர்கள் விளம்பர பதாகைகளையும், சமூக வலைதளங்களில் உள்ள விளம்பரங்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். விதிமீறலில் ஈடுபட்டால் புதுச்சேரி கலால் விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


1 More update

Next Story