சந்திரபிரியங்காவை நீக்கியதால் தலித் மக்களுக்கு துரோகம்


சந்திரபிரியங்காவை நீக்கியதால் தலித் மக்களுக்கு துரோகம்
x

சந்திரபிரியங்காவை நீக்கியதால் தலித் மக்களுக்கு துரோகம் என ஆதிதிராவிடர் கூட்டமைப்பு அறிக்கை விடுத்துள்ளது.

பாகூர்

ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் கூட்டமைப்பு மாநில தலைவர் ரோக.அருள்தாஸ், பொதுச்செயலாளர் கலைமணி, பேரவை தலைவர் முருகையன் ஆகியோர் கூட்டாக விடுவித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலித் அமைச்சர் சந்திரபிரியங்கா 2½ ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். அவர் வகித்து வந்த இலாகாக்களில் எந்த பிரச்சினையும் இல்லாமல் செயல்பட்டு வந்தார். அவர் கூறிய குற்றச்சாட்டுகள் பாலின தொல்லை, சாதி ரீதியான பழி போன்ற குற்றச்சாட்டுக்கு பதில் கூற வேண்டிய முதல்-அமைச்சர் ரங்கசாமி விளக்கம் அளிக்காமல், அமைச்சர்களை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறார். ஒரு தலித் அமைச்சரை நீக்கம் செய்து, என்.ஆர்.காங்கிரஸ் அரசு ஆதிதிராவிடர் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. சந்திரபிரியங்காவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும், இல்லையென்றால் தலித் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story