இந்திய நூலக அறிவியலின் தந்தை பிறந்தநாள் விழா


இந்திய நூலக அறிவியலின் தந்தை பிறந்தநாள் விழா
x

அம்பகரத்தூர் அரசு பள்ளியில் இந்திய நூலக அறிவியலின் தந்தை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அம்பகரத்தூர்

காரைக்கால் அடுத்த அம்பகரத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், இந்திய நூலக அறிவியலின் தந்தை டாக்டர் அரங்கநாதனின் 131-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் துணை முதல்வர் ஞானபிரகாசி தலைமை தாங்கி பேசும்போது 'மாணவர்கள் புத்தகம் படிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், கல்வி மேம்படவும் இது உறுதுணையாக இருக்கும்' என்றார்.

இதைத்தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் டாக்டர் அரங்கநாதனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நூலகர் ராஜலட்சுமி செய்திருந்தார்.


Next Story